Pages

Friday 28 December 2012

அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?

இவங்க ரெண்டும் எனக்குப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள்.

ரொம்ப சந்தோஷம். அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?

உடைமுழுக்க ஏதேதோ கம்பெனி விளம்பரமா இருக்கு?

என்ன டாக்டர், அந்த பேஷண்டுக்கு ஆஸ்பத்திரில குடுத்த உடைமுழுக்க ஏதேதோ கம்பெனி விளம்பரமா இருக்கு?

அந்தக் கம்பெனிகள் எல்லாம் சேர்ந்துதான் அவரோட அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் பண்றாங்க.

சரியாப் போச்சு.

என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்து சொந்தம்.


 என்ன சார் நீங்க இவ்வளவு உரிமையோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிடறீங்க?

நான் உங்க சொந்தக்காரன் சார்.

எப்படி?

என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்து சொந்தம்.

தினசரி பேப்பர் விலை ஏறிகிட்டே போகுது?


 கணவன்: என்னது இதூ, தினசரி பேப்பர் விலை ஏறிகிட்டே போகுது?

மனைவி: நீங்தான் எந்தப் பேப்பரும் வாங்கறது இல்லை. அப்புறம் என்ன கவலை?

கணவன்: நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கஞ்சன். இப்படி விலை ஏறினா பேப்பர் வாங்கறதை நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்.

தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் எவனாவது வருவான்னுதான்.

 என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே கிளினிக்கைத் திறந்து வெச்சிகிட்டு இருக்கீங்க?

தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் எவனாவது வருவான்னுதான்.

பால திருப்புற சுந்தரி.

அந்த விமன்ஸ் கிரிக்கேட் டீம்ல இருக்காளே ஸ்பின் பௌலர், அவள் பேர் என்ன தெரியுமா?
தெரியாதே?

திருப்புற சுந்தரி. 

அவளைவிட பெட்டரா டாப் ஸ்பின் பௌலிங் போடறவ எதிர்த்த டீம்ல இருக்கா, அவள் பெயர் தெரியுமா உனக்கு?

என்ன?

பால திருப்புற சுந்தரி.

அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க

 என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது?

ஒண்ணும் செய்யவேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்.

எடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.

 உன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா?

ஓ இருந்ததே! இருபது கிலோ எடை குறைஞ்சது.

நெஜமாவா?

எடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.

என்னோட எல்.ஐ.ஸி. பணம் கிடைச்சிடும்.

ஏங்க இப்படியே நான் சமைச்சி சமைச்சி போட்டுக்கிட்டு இருக்கேனே, எனக்கு என்னதான் கிடைக்கப்போகுது சொல்லுங்க.

இப்படியே சமைச்சின்னா கூடிய சீக்கிரம் என்னோட எல்.ஐ.ஸி. பணம் கிடைச்சிடும்.
.........................

ஒரு சொட்டுகூட வைக்கலை.

 எங்கப்பா சம்பாதிச்ச துட்டு எல்லாத்தையும் குடியிலே அழிச்சிட்டார்.

அடப்பாவமே, உனக்கு ஒண்ணும் விட்டுவைக்கலையா?

ஒரு சொட்டுகூட வைக்கலை.

ஆனா புக் இருந்தாமட்டும் படிக்கத்தோணலையே!

 எனக்கு ஒரு சந்தேகம்டா.

என்னடா, கேளு.

பைக் இருந்தா ஓட்டத்தோணுது, டி.வி. இருந்தா பாக்கத்தோணுது...

இதில் என்ன சந்தேகம்?

ஆனா புக் இருந்தாமட்டும் படிக்கத்தோணலையே!

குரைக்கிற நாய் கடிக்காது.

 குரைக்கிற நாய் கடிக்காது.

எப்படிடா அவ்ளோ உறுதியாச் சொல்றே?

ஒரே சமயத்தில அதால ரெண்டு வேலையை செய்யமுடியாது, அதான்.

அன்னிக்கு சண்டைக்கு வந்தே!"

மனைவி;"எங்க அம்மாவுக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆயிட்டதுன்னு டாக்டர் சொல்றார்!"

கணவன்;"இதையேதான் நான் சொன்னதுக்கு அன்னிக்கு சண்டைக்கு வந்தே!"

உறிஞ்சி எடுத்துட்டே இருக்காளே டாக்டர்

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே குரூப் ரத்தமாயிருக்கே
சபாஷ்!

பின்னே இருக்காதா டாக்டர்! பத்து வருஷமா அவ என் ரத்தத்தை
உறிஞ்சி எடுத்துட்டே இருக்காளே டாக்டர்

காக்கா பிடிக்கறதே வேலையாய் இருந்தா இப்படித்தான்.

அவர் ரொம்ப கலரா இருந்தார். இப்பக் கருப்பாய்ட்டார்.

காக்கா பிடிக்கறதே வேலையாய் இருந்தா இப்படித்தான்.

ஒரு கொடுமையான சம்பவம்

.
திருச்சி'ல நேற்று நடந்த ஒரு கொடுமையான சம்பவம்,
நேற்று காலை 8 மணிக்கு பூஜா என்ற பெண்ணை,
அவளது சொந்த மாமா, மற்றும் விநாயகம் என்ற ஆட்டோ டிரைவர் இருவரும் வீட்டில் இருந்து கதற கதற இழுத்து சென்று 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
LKG ல சேத்துட்டாங்க
சே.......பாவம் ல ...:-(( :'(

ஃபேஸ்புக் வாழ்க்கைல status போடுவதற்காக வாழ்கிறோம்.

நிஜ வாழ்க்கைக்கும்",

"ஃபேஸ்புக் வாழ்க்கைக்கும்",

ஓரே ஓரு வித்தியாசம் தான்.

1.நிஜ வாழ்க்கைல status க்காக வாழ்கிறோம்,

2.ஃபேஸ்புக் வாழ்க்கைல status போடுவதற்காக வாழ்கிறோம்.

எதை போட்டு செஞ்சா "தண்டசோறு"

புளி போட்டு செஞ்சா
"புளி சோறு"

Lemon போட்டு செஞ்சா
"LEMON சோறு"

தயிர் போட்டு செஞ்சா
"தயிர் சோறு"

Pls pls சொல்லுங்க
எதை போட்டு செஞ்சா
"தண்டசோறு"

அவரு 13 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்

அப்பா,- “ நீ வளர்ந்த பின் யாரைப் போல இருக்க விரும்புகிறாய்?”

பையன் ;” காந்தியைப் போல”

“ வெரி குட், காந்திட்ட உனக்கு பிடிச்ச விஷயம் என்ன?

“ அதா? அவரு 13 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்”””

காக்கா பிடிக்கறதே வேலையாய் இருந்தா

அவர் ரொம்ப கலரா இருந்தார். இப்பக் கருப்பாய்ட்டார்.

காக்கா பிடிக்கறதே வேலையாய் இருந்தா இப்படித்தான்.

எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சும்மா.

டாக்டர், என்னோட வீட்டுக்காரர் சாகப் பிழைக்க இருக்கார். நான் உங்களைத்தான் நம்பியிருக்கேன்.

எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சும்மா.

பாட்டிக்குத்தான் கை நடுங்கும்

தாய்: ஏண்டா உனக்கு மருந்தை எப்பவும் பாட்டியே கொடுக்கணும்னு சொல்றே?

சிறுவன்: பாட்டிக்குத்தான் கை நடுங்கும், அதனால பாதி மருந்து கீழேயே போயிடும்!

ரிசர்வ் பேங்க் ஏ.டீ.ம். எங்க இருக்குன்னான்!

நம்ம மக்கு ஒரு கேள்வி கேட்டான்பாரு, அப்படியே ஆடிப்போய்ட்டேன்!

அவனுக்கு ஒண்ணும் தெரியாதேப்பா, என்ன கேட்டான் அப்படி?

எல்லா பேங்க் ஏ.டீ.ம்.களையும் பார்த்திருக்கேன், ரிசர்வ் பேங்க் ஏ.டீ.ம். எங்க இருக்குன்னான்!

பெயரை மதர் சங்கம்னு மாத்திட்டோம்.

எங்க மாதர் சங்கத்தில எல்லோருக்கும் குழந்தை பிறந்தாச்சு. அதனாலே...

அதனாலே?

பெயரை மதர் சங்கம்னு மாத்திட்டோம்.

நரி முகத்துல விழிச்சா நல்லதுங்கற நம்பிக்கைதான்!

காலைல தூங்கி எழுந்ததும் நான் என் மனைவி முகத்தைப் பார்ப்பேன்.

அவ்வளவு பாசமா?

அதெல்லாமில்லை, நரி முகத்துல விழிச்சா நல்லதுங்கற நம்பிக்கைதான்!

நீங்க தானே, அடக்கமான பொண்ணு வேணும்னு பிரியப்பட்டீங்க .......

என்ன தரகரே, பொண்ணு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு,
சுடுகாட்டுக்கு கூட்டி வந்திருக்கீங்க?

நீங்க தானே, அடக்கமான பொண்ணு வேணும்னு பிரியப்பட்டீங்க .......

அவ்ளோ பெரிய bag எல்லாம் எங்க கிட்ட கிடையாது சார்.

bag கடையில் customer:சார் சீக்கிரம் bag குடுங்க sir நேரம் ஆச்சு train ah பிடிக்கணும்.

shop keeper: அவ்ளோ பெரிய bag எல்லாம் எங்க கிட்ட கிடையாது சார்.

customer:??!!

அலிபாபா.

கான்ஸ்டபிளா இருக்கிற எங்க சித்தப்பா இதுவரை நாற்பது திருடர்களைப் பிடிச்சிருக்காரு.

அப்படியா! உங்க சித்தப்பா பேரு?

அலிபாபா.

நான் குறைச்சா அப்பறம் உங்க நாயால சரியா குரைக்க முடியாதே

டாக்டர், எங்கவீட்டு நாயால சரியா குரைக்க முடியலை...

ஃபீஸ் நூறு ரூபாய் ஆகும்.

கொஞ்சம் குறைங்க டாக்டர்...

நான் குறைச்சா அப்பறம் உங்க நாயால சரியா குரைக்க முடியாதே?

என் அம்மாவும் மனைவியும் சிரிச்சுப் பேசிட்டிருந்தாங்க

என் அம்மாவும் மனைவியும் சிரிச்சுப் பேசிட்டிருந்தாங்க.

அப்படியா? எங்கே?

என் அம்மா எதிவீட்டுக்காரிகிட்டேயும், 
மனைவி பக்கத்துவீட்டுக்காரிகிட்டேயும்!

அது தண்ணீர்னா பயப்படுகிறவர்களுக்கு.

அந்தப் பணக்காரர் வீட்டில் மூணு நீச்சல்குளம் இருக்கு. ஒண்ணுல சுடுதண்ணீர்,
இன்னொண்ணுல பச்சைத்தண்ணீர்...
மூணாவதுல?

அது காலியாக இருக்கும். 

அது தண்ணீர்னா பயப்படுகிறவர்களுக்கு.