Pages

Thursday 29 November 2012

மாமூல் வாங்கிரலாம் சார்


எஸ்.ஐ: என் வீட்ல புகுந்து ஒருத்தன் திருடிட்டு போறதா அவனை புடிச்சு
ஏட்டு: எப்படியாவது மாமூல் வாங்கிரலாம் சார்
-----------------------------------------------

நகைக்கடைக்காரர்: ஏண்டா உனக்கு என்னா தில் இருந்தா என் கடைல திருடின நகைய என் கடைலயே கொண்டு வந்து விற்பே
திருடன்: உங்க கடை சீலை பார்த்து எவனும் வாங்க மாட்டேங்கிறான்
-----------------------------------------------

நீதிபதி: பேங்க்ல இருந்து திருடின பணத்தை பேங்க்லயே டிப்பாசிட் பண்ணியிருக்கே மறு நாளே வித் ட்ரா பண்ணியிருக்கே
திருடன்: பணம் போட அது பாதுகாப்பான இடமில்லேனு கொஞ்சம்லேட்டா ஸ்பார்க் ஆச்சு எஜமான்
-----------------------------------------------

எஸ்.ஐ: ஏன்யா இவரோட லூனாவை திருடினே
திருடன்: எனக்கு கீர் வண்டி ஓட்டத்தெரியாதே
-----------------------------------------------

நிருபர்1: எடிட்டர் ஏன் சப் எடிட்டரை போட்டு இந்த அடி அடிக்கிறார்
நிருபர்2: அந்தரங்கம் தொடர்ல ஆசிரியரோட அந்தரங்கத்தை எழுதிவிட்டாராம்
-----------------------------------------------

என் மனைவி பயந்து

வீட்டுக்காரர்: ஏம்பாவாரம் ஒரு தடவையாவது வந்து போப்பா என் மனைவி பயந்து நடுங்கறத பார்க்கனும்
திருடன்: ??????
-----------------------------------------------

கணவன் மனைவியிடம்: இந்த திருடன் ரஜினி ரசிகன்னு நினைக்கிறேன்
திருடன்: அட..எபிடி கரெக்டா சொல்றிங்க (ரஜினி ஸ்டைலில்)
கணவன்: சிங்கிளா வந்திருக்கியே 
-----------------------------------------------

திருடன் 1: எழுத்தாளர் வீட்ல திருடப்போனது தப்பா போச்சு
திருடன்2: பத்திரிக்கைகள்ள இருந்து திரும்பிவந்த கதைகள் தான் கிடைச்சது
-----------------------------------------------

திருடன் 1: வர வர தொழில் டல்லடிக்குது பேசாம அரசியல்ல குதிக்கலாம்னு இருக்கேன்
திருடன்2: ??????????
-----------------------------------------------
எம்.எல்.ஏ: ஏம்பா..மந்திரிங்க வீட்டையெல்லாம் விட்டுட்டு என் வீட்ல திருடவந்திருக்கியே ?
திருடன்: ??????
-----------------------------------------------

கணவன்: நம்மளை டின் கட்டிட்டு திருடிட்டு போற திருடன் கிட்டே என்னடி பேச்சு
மனைவி: உங்கம்மா ஊர்ல இருக்கிறப்ப ஒரு நடை வந்துபோகச்சொன்னேன்
-----------------------------------------------

எஸ்.ஐ: திருடனை எப்படி மயக்கம் போட்டு விழ வச்சிங்க‌
டாக்டர்: நான் உயிரை காப்பாத்தற டாக்டருப்பான்னேன் அவ்ளதான்
-----------------------------------------------

லாயர்: நான் ஒரு லாயர் என் வீட்லயா திருடறே ..உன் மேல கேச போட்டு
திருடன்: அதுக்கு முதல்ல நல்ல லாயரா பாரு
-----------------------------------------------

பேங்க்ல இருந்து திருடின பணத்தை

நீதிபதி: பேங்க்ல இருந்து திருடின பணத்தை பேங்க்லயே டிப்பாசிட் பண்ணியிருக்கே மறு நாளே வித் ட்ரா பண்ணியிருக்கே
திருடன்: பணம் போட அது பாதுகாப்பான இடமில்லேனு கொஞ்சம்லேட்டா ஸ்பார்க் ஆச்சு எஜமான்

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?


எனக்கு விநாயகரை ரொம்ப பிடிக்கும்
எனக்கு விநாயக சதுர்த்தியை ரொம்ப பிடிக்கும்
ஓ! ஏன் அப்படி?
அன்னிக்கிதானே  கொழுக்கட்டை கிடைக்குது , அதான்!
------------------------------

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? 
ஆகலை.  
அட. இன்னும் ஆகலையா?
ஒரு தடவை ஆயிடுச்சு.  மறுபடி இன்னும் ஆகலை அதை சொன்னேன்!
-------------------------------------------------------------------------------

பேஸ்புக் லே ஏன் எப்பவும் 'லைக்' மட்டும் போடுறீங்க. கமெண்ட்ஸ் ஏன் போடுறதில்லை?
லைக்  படிக்காமலே போட்டுறலாம்.கமெண்ட்ஸ் அப்படி போட முடியாதே. அதான்!
----------------------------------------------------------------------------------------

ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாமா?
பணம் இல்லை போலிருக்கே?
உங்க பாக்கெட்டிலே பணம் இல்லையா?
உங்க பாக்கெட்டிலே இல்லை போலிருக்கே அதை சொன்னேன்!

Sunday 25 November 2012

கப்பலை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்

ஒரு கப்பலில் மேஜிக் நிபுணர் எப்போதும் நிகழ்ச்சி நடத்துவார்...
அவருடன் எப்போதும் ஒரு கிளி கூடவே இருக்கும்...

மேஜிக் நிகழ்ச்சியை அந்த கிளி கூடவே இருந்து பார்த்து நிகழ்ச்சிகளை பார்த்து அலுத்து போனது..

ஒரு அளவுக்கு பொருள்களை மறையவைத்து மீண்டும் கொண்டு வந்துவிடுவார்..அந்த மேஜிக் நிபுணர்..

.ஒரு எல்லைக்கு மீறி நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை என அந்த கிளிக்கு ஆதங்கம்..

ஒரு நாள் இரவு நிகழ்ச்சி மேஜிக் நிபுணர் நடத்தி கொண்டிருந்த போது அந்த கப்பல் பாறையின் மீது மூழ்கிவிடுகிறது..
அந்த கிளியும் அந்த மேஜிக் நிபுணர் மட்டுமே தப்பிக்கிறார்கள்..

அந்த மேஜிக் நிபுணர் ஒரு தீவில் மயக்கத்துடன் ஒதுங்குகிறார்...மயக்க நிலையில் இருந்த நிபுணரை கிளி பறந்து வந்து அருகில் உட்கார்ந்து பார்துகொண்டேஇருக்கிறது...

மயக்கம் தெளிந்த மேஜிக் நிபுணரை பார்த்து கேள்வி கேட்கிறது..கிளி
''நான் தோல்வியை ஒப்புக்கொள்ளுகிறேன் ...கப்பலை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் ''என்று கேட்டது..
நடந்த்து என்ன என்று தெரியாமல்..

களவாணி மதராசபட்டினம் போயிருக்கு

‎"கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?"

"பின்னே.... 'கபாலி சென்னைக்குப் போயிருக்கான்'கிறதை 'களவாணி மதராசபட்டினம் போயிருக்கு'ன்னு சொல்றாளே!"

குப்பை கொட்டிருந்தா போதும்!

எங்க ஆபீஸ்ல கூட்டி பெருக்க ஒரு ஆள் வேணும்..."

"முன் அனுபவம் இருக்கணுமா?"

"ஏதாவது ஒரு கம்பெனில அஞ்சு வருஷம் குப்பை கொட்டிருந்தா போதும்!"

மகளிர் அணி தலைவி இடுப்புல

உங்க மனுவை ஏன் மகளிர் அணி தலைவி இடுப்புல சொருகிட்டு போறாங்க?"

"தலைவரோட பார்வைக்கு செல்ல வேண்டாமா?"

பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி

எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"

"அப்படியாவது நீங்க என்னைப் பார்த்து பல்லைக்காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்...!"

உங்க மனைவிக்கு பேச்சே வராது...!

இந்த ஆபரேஷனுக்கு அப்புறம் உங்க மனைவிக்கு பேச்சே வராது...!"

"நீங்க இவ்வளவு கைராசியானவர்னு முன்னாலயே தெரியாமப் போச்சே டாக்டர்...!"

அவளுக்கு ஒரு காரணம்

‎"நீ வீட்டுக்கு லேட்டாப் போனா, உன் மனைவி ரொம்ப சந்தோஷப்படுவாங்களா... ஏன்?"

"என்னை அடிக்கறதுக்கு அவளுக்கு ஒரு காரணம், கிடைச்சுடுச்சேன்னுதான்!"

டெய்லி புதுசு புதுசா மாத்திக்கிட்டே இருக்கலாம்ல

மனைவி : நான் செ‌ய்‌தி‌த் தாளா இருக்கக் கூடாதான்னு யோசிக்கிறேன். எப்போதும் உங்க கையில இருக்கலாமே

கணவன் :நீ செ‌ய்‌தி‌த் தாளா இருந்தா நானும் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். டெய்லி புதுசு புதுசா மாத்திக்கிட்டே இருக்கலாம்ல

மனைவி : ?!?!?!?

என்னையும் எழுப்பிடறா டாக்டர்

டாக்டர், என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்கறா..."

"இதுக்குப்போய் நீங்க ஏன் கவலைப்படறீங்க..?"

"தனியா நடக்க பயமா இருக்குன்னு என்னையும் எழுப்பிடறா டாக்டர்!"

கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு

‎"உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..?"

"சாயந்திரமானா சமையல் வேலைகளைக்கூட கவனிக்காம மெகா சீரியல் பாக்க ஆரம்பிச்சுடறாரு டாக்டர்!"

நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க.

எதுக்கு நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?"

"வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!"

அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு

வாப்பா ஆள் ரொம்ப மாறிட்டியே பழைய ராமு மாதிரியே இ‌ல்லையே! 

நான் ராமு இல்லை.

அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா பேருமா மாறிப் போச்சு.

அப்படியே என்னையும் மறந்துடேன்

காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .

காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . . 

Saturday 24 November 2012

காலேஜ்லயா, வீட்லயா..சார்?

படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்
தூங்கினா போதும்..!
-
காலேஜ்லயா, வீட்லயா..சார்?
(அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு)

தொண்டர்களிடம் பேசும்போது

தொண்டர்களிடம் பேசும்போது, கட்சியின் ஆணிவேர், அத்திவேர்
சாஃப்டுவேர், ஹார்டுவேர் எல்லாமே நீங்கதான்னு தலைவர் ஏன்
சம்பந்தமில்லாம பேசறார்?
-
தனக்கு கம்யூட்டர் அறிவும் உண்டுன்னு சிம்பாலிக்கா சொல்றார்

என் மனைவி பூசணிக்காய்

என் மனைவி பூசணிக்காய் சாம்பார் பண்ணினா இன்னிக்கு பூரா
சாப்பிடலாம்…!
-
நிஜமாவா…ஏன்?
-
முழு பூசணிக்காயை அப்படியே போட்டு சமையல் பண்ணிடுவா..!

அடக்கமான மனைவி தேவை

அடக்கமான மனைவி தேவைன்னு இன்டர்நெட்டில் விளம்பரம்
கொடுத்தது தப்பாப் போச்சா ஏன்?
-
அழகான கணவன் விண்ணப்பிக்கலாம்னு என் மனைவியும்
விளம்பரம் கொடுத்திருக்கா!

ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மனைவியா வரணும்னு

இனிமே மனிதப்பிறவியே எடுக்காம இருக்க என்ன செய்யணும்
சாமி?
-
ஏன் அப்படி கேட்கிறாய்?
-
ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மனைவியா வரணும்னு
வேண்டிக்கிறா என் மனைவி
-

வசூலில் சாதனை படைத்த தலைவா

தலைவர் ஏன் உன்னை கட்சியை விட்டு நீக்கிட்டார்?
-
வசூலில் சாதனை படைத்த தலைவா வருக-ன்னு பேனர் கட்டினது
தப்பாம்!

50 கோடியே 60 லட்சம் ஆயிடுச்சி தலைவா…!

50 கோடியே 60 லட்சம் ஆயிடுச்சி தலைவா…!
-
நம்ம கட்சி உறுப்பினர் எண்ணிக்கையா?
-
இல்ல, நம்ம கட்சி வருமானம்!

பெரிய போலீஸ்னு நினைப்பு

-
கபாலிக்கு பெரிய போலீஸ்னு நினைப்பு…
-
ஏன் ஏட்டய்யா..
-
என்னாச்சு?
-
மாமூல் வாங்க லேட்டா போனதுக்கு, கிரவுண்டை நாலு
ரவுண்ட் சுத்திட்டு வரச் சொல்றான்!

லேட்டஸ்ட் சிகிச்சை ரூட்

-
என்ன டாக்டர் இது…லைட்டை கண்ணுல அடிக்காம
என்னோட சட்டை பாக்கெட்ல அடிச்சுப் பார்க்கிறீங்க?
-
இதுதான்யா லேட்டஸ்ட் சிகிச்சை ரூட்!

செருப்பு வீசறவங்களுக்கு

தலைவர் போற மீட்டிங்குக்கு எப்படிய்யா இவ்வளவு
கூட்டம் வந்துச்சு…?
-
அவர் மேல குறி தவறாம செருப்பு வீசறவங்களுக்கு
சிறப்புப் பரிசுன்னு அறிவிச்சிருந்தாங்களாம்..!

சி.பி.ஐ,ஆபிசரோன்னு

வேட்டி சட்டையோட வர்றவங்களை மட்டும் தான்,
தலைவரைப் பார்க்க அனுமதிக்கிறாங்களே…எதுக்கு?
-
பாண்ட் சர்ட்டோட கொஞ்சம் டிப்டாப்பாக யாரைப்
பார்த்தாலும் தலைவர் சி.பி.ஐ,ஆபிசரோன்னு பயந்து
மயக்கமாயிடுறாரு!

அம்மி ஆட்டுக்கல்

என்ன சார் வீட்டு வாடகை ரொம்ப அதிகமா சொல்றீங்க?
-
பின்னே…அம்மி ஆட்டுக்கல் எல்லாம் வாங்கி போட்டிருக்கேனே
தம்பி!

பால் காய்ச்சிட்டித்தான்

அரஸ்ட் ஆன தலைவர் ஓவரா பிடிவாதம் பிடிச்சுட்டாராமே?
-
ஆமாம்…லாக் அப்புக்கு உள்ளே பால் காய்ச்சிட்டித்தான்
நுழைவேன்னு சொல்லிட்டாரு..

நாலாயிரம் கோடின்னு

கட்சி ஆரம்பிக்க சொல்லி மனைவி நச்சரிகிறாங்களா..
ஏன்?
-
ஏழு ஆண்டில் அரசியல் கட்சிகளின் வருமானம் 
நாலாயிரம் கோடின்னு செய்தியில சொன்னாங்களாம்!

அவரது மனைவிக்கும் என்ன தகராறு

வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தவருக்கும் 
அவரது மனைவிக்கும் என்ன தகராறு?
-
இவ்ளோ வருமானத்தை ஏன் கண்ணிலே 
காட்டலைன்னூ கேட்டுத்தான்!

ஓய்வுன்னு சொல்லு!

எதிரியிடம் நம்ம அரசர், ஆறுமாச போர் நிறுத்த 
உடன்படிக்கை செய்திருக்கிறார்..!
-
அப்ப எதிரி மன்னர் வாளுக்கும், நமது மன்னர் காலுக்கும்
ஓய்வுன்னு சொல்லு!

சி.பி.ஐ.அரெஸ்ட்

சூதாட்டம் நடத்தினதுக்காக, ரெண்டு தொண்டர்களை
தலைவர் கட்சியிலிருந்து நீக்கிட்டாராமே…ஏன்?
-
சி.பி.ஐ.அரெஸ்ட் பண்ண வந்தப்ப தலைவருக்கு
‘புழலா…திகாரா’ன்னு பந்தயம் வச்சாங்களாம்..!

லைட்டை கண்ணுல அடிக்காம

என்ன டாக்டர் இது…லைட்டை கண்ணுல அடிக்காம
என்னோட சட்டை பாக்கெட்ல அடிச்சுப் பார்க்கிறீங்க?
-
இதுதான்யா லேட்டஸ்ட் சிகிச்சை ரூட்!

Monday 5 November 2012

எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?

பக்தன் : கடவுளே..! நான் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கேன்.. எப்படிப்பட்ட பொண்ணை தேர்ந்தெடுக்கணும்..?

கடவுள் : நல்லா அழகானவளா இருக்கணும்.

நல்லா சமைக்கத் தெரிஞ்சவளா இருக்கணும்..

நல்லா பணக்காரியா இருக்கணும்.. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்காம இருக்கணும்...!!!

இந்த தடவையாவது சாவாரா’னுதான்

“சாகும் வரை உண்னாவிரதம் இருக்குற நம்ம தலைவரை பற்றி மக்கள் என்ன பெசிக்கிறாங்க “
“ இந்த தடவையாவது சாவாரா’னுதான் “
---------------

ஸ்ரீசாந்த் : 10 ஒவரும் போடனும், BAT ல படாம போடனும், ஒரு ரன் கூட குடுக்காம போடனும் . .
தோனி : அப்ப நி Net Practice ல தான் போடனும்.
--------------

Friday 2 November 2012

நீங்க உயரமா வளர்வீங்களா அப்பா

அப்பா: நல்லாச் சாப்பிட்டாத்தான் உயரமா வளரலாம். நல்லாச் சாப்பிடு
மகன்: நீங்க உயரமா வளர்வீங்களா அப்பா?
அப்பா: நான் வளரமாட்டேன்
மகன்: அப்புறம் ஏன் சாப்பிடுறீங்க?
அப்பா: !?!?!?

எங்கே, எப்படித் தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா? '

ஓர் ஏழைப் பெண் தன்னுடைய பையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.

"இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னு தெரியலை''

ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 ""நாலு வாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''

கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத் தூக்கிக் குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.
 பையன் விழுங்கிய காசு வெளியே வரவில்லை.

     அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார். பையனைத் தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒரு தட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண் நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.

"சார் நீங்க டாக்டருங்களா?''

"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித் தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா? ''

நீ கேக்கப் போற?

"மாப்ளே... அந்தப் பிச்சைக்காரன் கேட்டதும் அஞ்சு ரூபாயை உடனே போட்டுட்டியே? ''
"எப்பிடி இருந்தாலும் நீ கேக்கப் போற? உனக்குக் கொடுக்கிறதை விட அவனுக்குப் போட்டா புண்ணியமாவது மிஞ்சும்''

அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்'

"என்னடா... போன் பேசிட்டு ஒரு மாதிரி ஆயிட்டே?''
"ஊர்ல இருந்து மச்சான் போன் பண்ணுனான். அங்க இருந்து அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்''
"புரியலை''
"என் மாமியாரைக் கூப்பிட்டுக்கிட்டு, மாமனார் இங்க வந்துக்கிட்டு இருக்காராம்''

ஒரு பஞ்ச் டயலாக்

""மாப்ளே, ஒரு பஞ்ச் டயலாக் சொல்லு பார்ப்போம்''
"புலிக்குப் பின்னாடி போன மானும்
ஃபிகருக்குப் பின்னாடி போன ஆணும்
பிழைச்சதா சரித்திரம் இல்லை''

பெரிய ஸ்வீட் மாஸ்டரா?

""உங்க அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டரா?''
""ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?''
""காலனியிலே வர்ற சின்னப்பிரச்னைகளைக் கூட பெரிசா, கிண்டி, கிண்டிவிடறார்...அதான் கேட்டேன்''

வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?

""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''

நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்

கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?
கணவன்: நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!

விளக்கெண்ணெய்

"எப்பவும் எள்ளுன்னா எண்ணெயா இருக்கணும்''
"நல்லெண்ணெயா, விளக்கெண்ணெயா சார்?''
"நல்லெண்ணெயா இருக்கணும்டா... விளக்கெண்ணெய்''

மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே


முதலாளி மணி 3 ஆச்சு கடைய சாத்தலாமா?
எதுக்கும் சாத்தறதுக்கு முன்னாடி அந்த பொடவை குவியலுக்குள்ள லேடீஸ் யாராவது இருக்காங்களான்னு பாத்துக்கங்க.
------------------------------
இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?”
“எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம்
வாங்கிட்டு வந்துருக்கேன்”
“அது என்ன 1500 ரூபா ஐட்டம்?”
ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.
------------------------------
ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அ‌ந்த கஷடத்துல எ‌ன் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.
------------------------------
டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு
இத நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.
------------------------------
ஞாபக மறதி
கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.
மனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே
------------------------------

ரோடு ரோலர் பஞ்சர்

மேஸ்திரியை ஏன் காண்ட்ராக்டர் சத்தம் போடறார்?ரோடு ரோலர் பஞ்சர் போட்ட செலவு இருநூறு ரூபாய்ன்னு
கணக்கு காட்டியிருந்தாராம்..!

---------------------------------
தலைவர் ‘நாட்டு’ வெடிகுண்டு வச்சிருந்தாராமே…
தலைவருக்கு ‘நாட்டு’ப்பற்று அதிகம், அதான்!
---------------------------------
நடிக்க விருப்பம் இருக்கறவங்க ஜாதகத்தோடு
வரணும்னு விளம்பரம் வந்திருக்கு…!
ஜாதகம் எதுக்கு…?
அவங்க எடுக்கறது மெகா சிரியல்…ஆயுசு கெட்டியானு
பார்த்துதான் செலக்ட் பண்ணுவாங்க…

!---------------------------------
சூரியன் கிழக்கில் உதிக்குதா, மேற்கில் உதிக்குதா?

சார்…நான் இந்த ஊருக்குப் புதிசு, எனக்குத் தெரியாது..!
---------------------------------
ஏன் டாக்டர், எனக்கு ஆபரேஷன் பண்ண மறுக்கறீங்க?
நீங்கதானே, ஜாதகப்படி உங்களுக்கு ஆயுசு கெட்டி’னு சொன்னீங்க…!
---------------------------------


உங்க நர்ஸைத்தான்..!

டாக்டர் ,தொட்டதுக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுக்கிறா?
யாரை தொட்டீங்க?
உங்க நர்ஸைத்தான்..!

--------------------
மல்யுத்த வீரர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது
தப்பா போச்சா…ஏன்?
எதற்கெடுத்தாலும் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா’னு கேட்கிறா..!

------------------------
போட்டின்னாலே, மறுக்கிற தலைவரை, இப்ப மட்டும் எப்படி
சம்மதிக்க வெச்சே?
‘பொட்டி’ ன்னு சொல்லித்தான்..!

Thursday 1 November 2012

கண்ணீர் நின்னு போச்சு

உன் புருஷன் செத்ததுக்கு நீ அழவே இல்லையே ஏன்?

நிறைய டி.வி. சீரியல்ல பார்த்து அழுதட்டதால் கண்ணீர் நின்னு போச்சு.

‘தேங்க்யூ பிரதர்’னு சொல்லிட்டாங்க.

அந்த சிஸ்டர்கிட்டே போய் ‘ஐ லவ் யூ’ சொன்னியே, என்னாச்சு?
‘தேங்க்யூ பிரதர்’னு சொல்லிட்டாங்க..!

-----------------
ஆசிரியர் : ஏண்டா பக்கத்து பையனை பார்த்து பார்த்து பரீட்சை எழுதுற?
மாணவன் : பரீட்சையை நல்லா பார்த்து பார்த்து எழுதுன்னு எங்க அப்பாதான் சொன்னார் சார்!
--------------

இது தலை தீபாவளி

தீபாவளி சமயங்கிறதாலா தலைவர் மேல உள்ள எதிர்ப்பை
வித்தியாசமா காட்டறாங்களா…

எப்படி?
செருப்புல பட்டாசு கட்டி வெச்சு, அதைக் கொளுத்தி அவர்
மேல வீசுறாங்க…!
--------------------
சிவகாசிக்குப் போறவங்க ‘குட்டி ஜப்பானுக்குப் போறேன்னு
சொல்லலாம். 
ஆனா ஜப்பானுக்கு போறவங்க ‘பெரிய சிவகாசி’க்குப்
போறேன்னு சொல்ல மாட்டாங்க..!
--------------------
ஜெயில் வாசல்ல எதுக்கு வெடி வெடிக்கறாங்க?
உள்ளே போன தலைவருக்கு இது தலை தீபாவளி…!

டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்.

Girl1: உன் வீட்டுக்காரரைத் திட்டுவியா?
Girl2: சே அதெல்லாம் நான் செய்யமாட்டேன்...அப்பப்ப அடிக்கறதோடு சரி.
Girl1: சாப்பிடும்போது கூட உன் கணவருக்கு ஆபிஸ் ஞாபகமா? எப்படிச் சொல்றே? 
Girl2: உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டுறார்.

அத்த நான் பார்தேனே.

மனைவி : ஏங்க நேத்து நீங்க எனக்கு நகை வாங்கி கொடுக்குற மாதிரி கனவு வந்துச்சுங்க.
கணவன் : ஆமா ஆமா, அப்போ உங்க அப்பா தான் பில்லுக்கு பணம் கட்டினாரு. அத்த நான் பார்தேனே.
---------------------------------
Man1: என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்.Man2: எப்படி? எத வச்சு சொல்லுறீங்க?
Man1: துவைக்க ஈஸியா இருக்கிற புடவையை தான் வாங்குவா.

என்னை கொல்ல தான் பிரியம்.

ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்.
------------------------------------------------
அந்த பூனை ஏன் இந்த ஸ்கூலை சுற்றி சுற்றி வருது?
அது எலி-மென்டரி ஸ்கூல்....
------------------------------------------------
ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்மாணவன் -
சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.
------------------------------------------------
Man-1 : என் மனைவிக்கு என் மீது கொள்ளை பிரியம்.
Man-2 : உங்களுக்கு பரவாயில்லை. என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.

நானும் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேன்


Wife :வேலை செய்யும்போது இடுப்ப கிள்ளாதீங்கன்னு  எத்தன தடவ சொல்றது?
Servant : நல்லா சொல்லுங்கம்மா .! நானும் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டேன்!
-------------------------------
8 ஐயும் 8 ஐயும் கூட்டினால் 9வரும் எப்படி?
தப்பா கூட்டினால் வரும்.
----------------------------
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச?கையை நீட்டு...?
நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!
----------------------------

இது இந்த வேண்டுதல படிக்கிறவங்க மேல சத்தியம்


பழனிமலை ஆண்டவா....
"வர்ற பிப்ரவரி 14க்குள்ள...எனக்கு ஒரு நல்ல லவ்வர் கிடைச்
சா இந்த வேண்டுதல படிக்குற எல்லாருக்கும்
மொட்டை போட்டு, 
நாக்குல   வேல் குத்தி,
அவங்க செலவுலையே 10000 பேருக்கு அன்னதானமும் ப்ண்ணி,
அவங்க செல்லையும் உன் உண்டியல்ல போடுறேன்....
இது இந்த வேண்டுதல படிக்கிறவங்க மேல சத்தியம் " 

அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் அழிஞ்சுடும் டாடி

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற??? 

மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் அழிஞ்சுடும் டாடி..


என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்

என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
எப்படிச் சொல்றே
பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.
----------------------------
எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!
அப்படியா?
ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்.
--------------------------------
ஆபீஸ்க்கு குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்கியே எதுக்குய்யா?
என் குழந்தைகளோட தூங்கிதான் எனக்கு பழக்கம் சார்...!
------------------------------------
உங்க பிரா கம்பெனியோட கிளைகள் பல ஊர்ல இருக்காமே எந்தெந்த ஊர்ல?
வியாசர்பாடி...! வாணியம்பாடி! காட்பாடி! தரங்கம்பாடி! குறிஞ்சிப்பாடி!
------------------------------------



ஆபிசில்

எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்
அவ்வளவு சுறுசுறுப்பா?
ஊஹும், அவருக்கு மூல வியாதி.
-------------------------------------------
சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?
அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.
----------------------------------------
5 மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்துடுவீங்களே 6 மணிக்கு வர்றீங்களே ரொம்ப வேலையா?
ஊஹும் பியூன் எழுப்ப மறந்துட்டான்.